நீலம் புயலானது மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கிறது
Wednesday, 31 October 2012
Tuesday, 30 October 2012
நீலம் புயல் தாக்கம்
வங்கக் கடலில் உருவான
நீலம் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 270 கிலோ மீட்டர்
தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
நீலம் புயல் கடலூர்-நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே இன்று கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலம் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், 1.5 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்ப வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், புயல் கரையை கடக்கும்போது மின்சாதனங்கள், தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலம் புயல்
தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர காற்றழுத்த தாழ்வு
மண்டலம் புயலாக உருமாறியுள்ள நிலையில் சென்னை துறைமுகத்தில் 7-ம் எண்
எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று வரை மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால்,புயலாக உருமாறி இருப்பதாகவும், இந்த புயலுக்கு '' நீலம் ' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயல் நாளை மாலை தமிழகத்தின் கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்றும், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக,தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்புயல் காரணமாக ,கடலூர்,நாகப்பட்டினம்,புதுச்சேரி, பாம்பன், எண்ணுர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தற்போது பெய்யும் கன மழை இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கன மழையாக தீவிரமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு எச்சரிக்கை
மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 48
மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலம் புயலாக மாறி வருவதால் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில்
இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் சின்னம் காரணமாக
மணிக்கு எழுபது முதல் 90 கிலோமீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என
வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தகவல் மையம்
புயல் மற்றும் வெள்ளச்சேதம் பற்றிய விவரங்களை அறிய, சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.அவசர உதவிகளுக்கு, 044-28447727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் புயல், மழை பற்றிய விவரங்களை அறிய, 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து பாதிப்பு இதனிடையே சென்னையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மீனம்பாக்கம் மற்றும் கிண்டி இடையே மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருவதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக மெட்ரோ ரயில் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு
புயல் சின்னத்தையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 1500 விசைப் படகுகளும், 1000 பைபர், கட்டுமரங்களும் கடலுக்குள் செல்லவில்லை. அவை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கம், மெரீனா பகுதியில் கடல் அலை சீற்றமாக இருந்தது. கோவளம், மாமல்லபுரம், கானாத்தூர், நெம்மேலி, செம்மஞ்சேரி, கடலிலும் அலை அதிக சீற்றத்துடன் இருந்ததால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தொடர்ந்து 3-வது நாளாக மீனவர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனர்.
புயல் தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று வரை மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால்,புயலாக உருமாறி இருப்பதாகவும், இந்த புயலுக்கு '' நீலம் ' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயல் நாளை மாலை தமிழகத்தின் கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்றும், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக,தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்புயல் காரணமாக ,கடலூர்,நாகப்பட்டினம்,புதுச்சேரி, பாம்பன், எண்ணுர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தற்போது பெய்யும் கன மழை இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கன மழையாக தீவிரமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு எச்சரிக்கை
தகவல் மையம்
புயல் மற்றும் வெள்ளச்சேதம் பற்றிய விவரங்களை அறிய, சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.அவசர உதவிகளுக்கு, 044-28447727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் புயல், மழை பற்றிய விவரங்களை அறிய, 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து பாதிப்பு இதனிடையே சென்னையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மீனம்பாக்கம் மற்றும் கிண்டி இடையே மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருவதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக மெட்ரோ ரயில் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு
புயல் சின்னத்தையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 1500 விசைப் படகுகளும், 1000 பைபர், கட்டுமரங்களும் கடலுக்குள் செல்லவில்லை. அவை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கம், மெரீனா பகுதியில் கடல் அலை சீற்றமாக இருந்தது. கோவளம், மாமல்லபுரம், கானாத்தூர், நெம்மேலி, செம்மஞ்சேரி, கடலிலும் அலை அதிக சீற்றத்துடன் இருந்ததால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தொடர்ந்து 3-வது நாளாக மீனவர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனர்.
புயல் தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Saturday, 27 October 2012
தண்ணீருக்குள் முழுமையாக மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
மொபைல்கள் சிறியதாக இருப்பதால் அதை எங்கு வேண்டுமானாலும் மிக எளிதாக
எடுத்துச் செல்ல முடியும். அப்படி எடுத்துச் செல்லும் போது அந்த மொபைல்
தவறுதலாக மழையில் நனையவோ
வாய்ப்பிருக்கிறது. அப்படி விழுந்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பின்பற்றினால் போது மொபைல்களைக்
காப்பாற்ற முடியும்.
1. முதலில் தண்ணீருக்குள் விழுந்த போனை உடனடியாக வெளியில் எடுக்க
வேண்டும். நீண்ட நேரம் அது தண்ணீருக்குள் இருந்தாலு மொபைலுக்கு
ஆபத்தாகிவிடும்.
2. வெளியில் எடுத்ததும் அது செயல்படுகிறதா இல்லையா என்று அவசரப்பட்டு கீகளை வேகமாக அழுத்தக்கூடாது.
3. வெளியில் எடுத்தவுடன் உடனடியாக மொபைலில் உள்ள பேட்டரியை வெளியில்
எடுக்க வேண்டும். அதன் மூலம் மொபைலுக்கு செல்லும் மின்சாரத்தை உடனே நிறுத்த
முடியும்.
4. அடுத்ததாக மொபைலில் உள்ள சிம்கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளையும் வெளியில் எடுக்க வேண்டும்.
5. பின் மொபைல் மற்றும் சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளை கவனமாக டவல் வைத்து துடைக்க வேண்டும்.
6. அவ்வாறு துடைத்தாலும் மொபைலில் சற்று ஈரப்பதம் இருக்கும். எனவே
உலர்ந்த நெல் அல்லது அரிசி இருக்கும் பாத்திரத்திற்கும் மொபைலை வைக்க
வேண்டும். ஏனெனில் இந்த உலர்ந்த அரிசி அல்லது நெல் மிக விரைவாக ஈரப்பதத்தை
உறிஞ்சிவிடும். அல்லது வேறு நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.
அதாவது ஹேர் ட்ரையரைக்கூட பயன்படுத்தலாம்.
9. இப்போது மொபைலில் உள்ள ஈரப்பதம் முழுமையாக காய்ந்திருக்கும் என்று
நினைத்தால் மொபைலில் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றை
பொருத்தி இயக்க ஆரம்பிக்கலாம். கண்டிப்பாக இப்போது மொபைல் வேலை செய்யும்.
மேற்சொன்னவற்றைக் கடைபிடிப்பதன் மூலம் மொபைல் இயங்க ஆரம்பித்தால்
வெற்றிதான். அப்படியும் மொபைல் இயங்கவில்லையானால் அந்த மொபைல் தண்ணீரினால்
மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். எனவே மொபைல் சர்வீஸ்
செய்பவரிடம் காட்டுவது நல்லது. ஏனெனில் அவர்கள்தான் மொபைலில் உள்ள
பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை மிக எளிதாக கண்டுபிடிப்பார்கள்.
Detail For Jayam Mobiles,Tholasampatty.
சனிப்பிரதோசம்
இன்று 27.10.2012 சனிப்பிரதோசம் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயம் தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம். இன்று சனிப்பிரதோசத்தை முன்னிட்டு தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில் நந்திக்கு சிறப்பு பூஜைகள் தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4.00 மணியளவில் நடைபெற்ற பூஜையில் கலத்துகொண்டனர்.
Saturday, 20 October 2012
தொளசம்பட்டி தீனதயாளன் ஆயுத பூஜை பாடல்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்
(வெள்ளைத்)
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.
வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,
ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!
Wednesday, 17 October 2012
Subscribe to:
Posts (Atom)