Wednesday, 13 February 2013

10 Th Model Questions

                                                            DOWNLOAD
TAMIL NADU SSLC SAMACHEERKALVI | TAMIL | ENGLISH | MATHS | SCIENCE | SOCIAL SCIENCE | STUDY MATERIALS AND MODEL QUESTION PAPERS
                        






Saturday, 26 January 2013

64-வது குடியரசு தினம்

சென்னை, ஜன. 26: சென்னை கடற்கரை சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற வண்ணமயமான குடியரசு தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் கே.ரோசய்யா.
திருந்திய நெல் சாகுபடி முறையைக் கடைப்பிடித்து அதிக மகசூல் கண்ட மதுரை மாவட்ட விவசாயிக்கு வேளாண் துறை சிறப்பு விருதினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நாட்டின் 64-வது குடியரசு தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வரைத் தொடர்ந்து, ஆளுநர் கே.ரோசய்யா விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
அவரை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா, தென் மாநிலங்களைச் சேர்ந்த முப்படைத் தலைவர்களையும், தமிழக போலீஸ் டி.ஜி.பி., சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர். இதைத் தொடர்ந்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பலத்தை பறைசாற்றியது: தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில், போர் வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முதல் முறையாக, இந்த அணிவகுப்பில் பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்தவர்களும், சிறைத் துறையினரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஐ.என்.எஸ். அடையாரில் அண்மையில் இணைக்கப்பட்ட விக்ரமாதித்யாவும் அணிவகுப்பில் இடம்பெற்றது.
தமிழக அரசின் பதக்கங்கள்: வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, கள்ளச்சாராய தடுப்பில் தீவிரமாக ஈடுபட்ட காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் பதக்கம், திருந்திய நெல் சாகுபடியில் சிறப்பாக நெல் உற்பத்தி செய்த விவசாயிக்கான வேளாண்மை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மதுரை மாவட்ட விவசாயி: திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயினை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறப்புப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்தப் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3,500 மதிப்புள்ள பதக்கம் அடங்கியதாகும்.
முதல் ஆண்டாக இந்த விருதினை மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெ.சோலைமலை பெற்றார். இதன்பின், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கண்கவர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விளக்கி அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. கடற்கரை சாலையில் பவனி வந்த, 27 அலங்கார ஊர்திகள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தன. இதில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்திகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சனிக்கிழமை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கேடயங்களும், சான்றுகளும் வழங்கப்பட்டன